பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் உரையாடலை ஊடகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஊடக ஒழுங்கு முறை ஆணையம் விதித்த தடையை நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது.
பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், பொது நிகழ்வில் பேசினார். அப்போது, அவர் போலீஸ் அதிகாரியையும், பெண் மாஜிஸ்திரேட்டையும் மிரட்டியுள்ளார். இதனால், ஊடக ஒழுங்குமுறை ஆணையமானது, அவரின் உரையாடல்களை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு தடை அறிவித்தது.
இது குறித்து இம்ரான் கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு, உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் அதர் மினல்லா தலைமையில் விசாரணைக்கு வந்தது. அவர், அந்த தடையை நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
மேலும், நாட்டின் ஊடக கண்காணிப்பு குழுவானது, தன் அதிகாரத்தை மீறி விட்டது என்று கூறி இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணையானது அடுத்த மாதம் ஐந்தாம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.