இந்தியாவில் 5ஜி சேவையை அமல்படுத்த தடை விதிக்க கோரி பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தியாவில் ஏற்கனவே 4ஜி தொழில்நுட்பம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகமாகி உள்ளது. இந்த வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் சந்தையில் அதிக அளவில் விற்பனைக்கு தொடங்கியுள்ளது. அதேநேரம் 5ஜி தொழில்நுட்பத்தால் பூமியில் பல்வேறு உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
இதை தடைசெய்ய பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யக் கூடாது எனக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் இந்த வழக்கு நீதிபதி ஜேஆர்.மிதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இதனை விசாரணை செய்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார். மேலும் விளம்பரத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது என்று கண்டனம் தெரிவித்தார். மேலும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கியதாக 20 லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.