Categories
தேசிய செய்திகள்

COVAXIN: செயல்திறன், பாதுகாப்பில் எந்த தாக்கமும் இருக்காது…. வெளியான தகவல்…..!!!!!

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் சென்ற வருடம் ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் போன்ற 2 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர், இந்தியன் வைராலஜி நிறுவனம் போன்றவை இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்தனர். கொரோனா கோவாக்சின் தடுப்பூசி டெல்டா போன்ற மரபணு உருமாற்றம் அடைந்த வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய சுகாதார ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவித்தது. வயது வந்தோருக்கு மட்டுமல்லாது 15 வயது-18 வயது கொண்ட பதின்ம வயதினருக்கும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்ததை அடுத்து இந்தியாவில் மட்டுமல்லாது உலக நாடுகளில் பலவற்றிலும் கோவாக்சின் பயன்படுத்தப்படுகிறது. இதையடுத்து உலக சுகாதாரநிறுவனம் அமைப்புகளும் அந்த தடுப்பூசியை பயன்படுத்தி வந்தது. இந்நிலையில் உலகம் முழுதும் கொரோனா பரவல் குறைந்து வருவதாலும், பெருமளவு மக்கள் தடுப்பூசி போட்டு கொண்டதாலும் அதன் தேவை குறைந்து வருகிறது. இதன் காரணமாக கோவக்சின் தடுப்பூசி உற்பத்தியை குறைக்கப்போவதாக பாரத்பயோடெக் நிறுவனம் முன்பே தெரிவித்திருந்தது. அத்துடன் நிறுவனத்தில் பல வசதிகளை மேம்படுத்த உள்ளதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்தது. சென்ற மார்ச் 14 ஆம் தேதி-22ஆம் தேதி வரையிலும் உலக சுகாதாரஅமைப்பின் குழு பாரத்பயோடெக் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வுக்குப் பிறகு  பாரத்பயோடெக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், கோவாக்சின் உற்பத்தியை குறைக்க உள்ளதாக தெரிவித்ததது. அதனை தொடர்ந்து அடுத்ததாக கோவாக்சின் சப்ளையே ஐநாவுக்கு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. இவ்வாறு  கோவாக்சின் விநியோகம் செய்வதை நிறுத்தியுள்ள விவகாரத்தில் தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு குறித்து எந்தவிதமான அம்சமும் இல்லை என்று பாரத்பயோடெக் நிறுவனமானது தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவாக்சின் செயல் திறன், பாதுகாப்பு ஆகியவற்றில் எந்ததாக்கமும் கிடையாது. ஆகவே உலகசுகாதார அமைப்பு முன்னதாக கொடுத்த தடுப்பூசி சான்றிதழானது இன்னும் செல்லுபடியாகும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |