உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது உலகமெங்கும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா குடும்பத்தின் சார்ஸ், மெர்ஸ், சோர்ஸ் கோவ் 2 என்று எந்த வகை உருமாறிய கொரோனா வைரஸ் ஆக இருந்தாலும் அதை ஒழிக்கும் புதிய சூப்பர்வேக்சின் என்ற தடுப்பூசியை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எம் ஆர் என் ஏ புதிய தொழில்நுட்பத்தில் இந்த தடுப்பூசியை கண்டறிந்துள்ளனர். அடுத்த ஆண்டு மனிதர்களுக்கு சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.