covid-19 பதித்த முதல் பெண் மீண்டும் covid-19 -ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்த கேரளா மாணவிக்கு இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பின்னர் இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் இவர் குணமடைந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு இரண்டாவது முறையாக மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது இவருக்கு உடல்நிலை சீராக உள்ள காரணத்தினால் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.