கொரோனா நோய்த்தொற்றுக்கு பத்திரிகையாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் குடும்பங்களுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ரூ .15 லட்சம் கருணையுள்ள உதவியை அறிவித்துள்ளார் என ஒடிசா முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் இதுவரை 108 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 35 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். மேலும், ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
32வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய கடைகள் தவிர பிற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. வாகனங்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மருத்துவர்கள், காவலர்கள், வங்கி அலுவலகங்கள், செய்தி நிறுவனங்கள் ஆகியவை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாடு முழுவதும் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர் பலருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், கொரோனவால் பாதித்த குடும்பங்களுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் நிவாரணம் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், இன்று ஒடிசா முதல்வர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், கொரோனவால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் யாரேனும் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.