பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் அதிவேக ரயிலில் ஏற்றப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கிறது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்த கொடிய வைரசுக்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலி ,ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகள் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில், அந்த வரிசையில் பிரான்சும் இருக்கிறது. பிரான்சில் இதுவரை மட்டும் 25, 233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,331 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்கு பிரான்ஸ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அந்நாட்டு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் சமாளிப்பதற்கு மிகவும் சிரமமாக இருப்பதாக சொல்லப்படுகின்றது.
இந்த நிலையில் அல்சேஸ் (alsace) பிராந்தியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை சமாளிப்பது சிரமமாக இருப்பதால், அங்கிருக்கும் நோயாளிகள் மற்ற பகுதிகளுக்கு (மருத்துவ திறன் வசதி கொண்ட) கொண்டு செல்லப்பட உள்ளனர், இதனால் நோயாளிகள் ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டு ரயிலில் மாற்றப்படும் வீடியோ காட்சி வெளியாகி இருக்கிறது.
VIDEO: COVID-19 patients are to be transported by specially-equipped high-speed train in France's Alsace region, where hospitals are struggling to cope with the number of cases. The patients will be transferred by train to regions where hospitals have greater spare capacity pic.twitter.com/QJmim8hNsr
— AFP News Agency (@AFP) March 26, 2020