அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த ஒருவர் கூறிய இறுதி வார்த்தைகள் அனைவரையும் கலங்கச்செய்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் சான் டியாகோவிற்கு, Michael Freedy என்ற 39 வயது நபர், தன் குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாட சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. அவர் அதிக வெப்ப நிலையால் உடல் சோர்வாக இருப்பதாக முதலில் நினைத்திருக்கிறார்.
அதன்பின்பு, கடும் அறிகுறிகள் ஏற்பட்டு, கடந்த வியாழக்கிழமை அன்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரின் மனைவி முக்கியமான தகவல் ஒன்றை கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
எனினும் பல மக்கள் தடுப்பூசி செலுத்த தயங்குகிறார்கள். இதேபோல மைக்கேலின் குடும்பத்தினரும், தங்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தங்களுக்கேற்ற தடுப்பூசியை தேர்ந்தெடுப்பதற்கு தாமதப்படுத்தி உள்ளனர். எனினும், நாங்கள் தடுப்பூசியை எதிர்க்கவில்லை என்று கூறியுள்ளனர்.
தற்போது மைக்கேல், தன் மரணத்திற்கு முன்பு, நாமும் தடுப்பூசியை செலுத்தியிருக்கலாம் என்று வேதனைப்பட்டு அவரின் மனைவிக்கு இறுதியாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். மைக்கேலுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். தற்போது அவரின் மனைவி அனைவரும் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்று கேட்டிருக்கிறார்.