ஓமிக்ரான் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் நியூயார்க் மாகாணத்தில் மருத்துவமனையில் அதிகமான குழந்தைகள் அனுமதிக்கபிபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, தற்போது உள்ள பரிசோதனை பற்றாக்குறையை விரைவில் தீர்ப்பதாக உறுதி கூறியிருக்கிறது. நியூயார்க் மாகாணத்தின் சுகாதாரத்துறை கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று எச்சரித்திருக்கிறது.
மேலும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் விகிதம் கடந்த 5-ஆம் தேதியை விட 4 மடங்கு தற்போது அதிகரித்திருக்கிறது. இதில் அதிகமானோர் 5 வயதுக்கு குறைந்த குழந்தைகள் தான். இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் தற்போது கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. அங்கு கடந்த ஒரே வாரத்தில் ஒரு நாளுக்கு சராசரியாக ஒரு லட்சத்து 90 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. எனவே, அமெரிக்க அதிபர் ஜோபைடன் இனிமேல் உடனடியாக மக்களுக்கு வீடுகளிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளக்கூடிய கருவியை இறக்குமதி செய்து இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்று கூறியுள்ளார்.