Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் வெகுவாக குறைந்த கொரோனா… கலைக்கப்பட்ட தடுப்புக்குழு…!!!

பாகிஸ்தான் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட தேசிய ஆணை மற்றும் செயல்பாட்டு மையம் கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தானில் புதிதாக கொரோனா தொற்று ஏற்படும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. எனவே, கொரோனாவை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட தேசிய மற்றும் செயல்பாட்டு மையத்தை கலைக்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருப்பதாவது, நேற்று என்சிஒசி கலைக்கப்பட்டது.

இந்த அமைப்பினர் நாடு முழுக்க கொரோனா பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டனர். என்ஓசி நடவடிக்கைகள் சர்வதேச அளவில் பாராட்டுகளை பெற்றிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். மேலும் நாடு முழுக்க நேற்று 194 நபர்களுக்கு மட்டும் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

Categories

Tech |