Categories
உலக செய்திகள்

“கொரோனா தொற்று அதிகரித்தாலும், உயிரிழப்புகள் குறைந்தது!”.. எந்த மாகாணத்தில்..? வெளியான தகவல்..!!

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா மாகாணத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, சுவிட்சர்லாந்திலேயே ஜெனிவா மாகாணத்தில் தான் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அங்கு 1,00,000 நபர்களில் 401 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சராசரியாக, தொற்று விகிதம் 265 ஆக இருக்கிறது. மேலும் நாட்டிலேயே குறைவான பாதிப்பு Uri மாகாணத்தில் பதிவாகியுள்ளது.

அங்கு தொற்று விகிதம் 166 ஆக உள்ளது. கொரோனாவின் முதல் அலையை விட தற்போது பலி எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்று சுகாதாரத் துறை தலைவர்களில் ஒருவராக இருக்கும் Patrick Mathys என்பவர் தெரிவித்துள்ளார். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பாதி மக்களுக்கு இரு தவணைத் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். எனினும் அது போதிய அளவு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |