சீன நாட்டின் டலியான் என்னும் நகரத்தில் திடீரென்று கொரோனா தொற்று அதிகரித்ததால் அந்நகரைச் சேர்ந்த 1500 பல்கலைக்கழக மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சீனாவில் உள்ள ஷூவாங்கே என்னும் பல்கலைகழக நகரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கிறது. எனவே, அந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களையும் தனிமைப்படுத்துமாறு நேற்று முன்தினம் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த பல்கலைகழகத்தை சேர்ந்த 1500 மாணவர்களை ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு காணொலி காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்படுகிறது. மேலும் அவர்களுக்கு தேவையான உணவுகள், அவர்களது இருப்பிடத்தில் கொடுக்கப்பட்டு வருகிறது. சீன அரசு, கொரோனா பரவலை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது இதன்மூலம் உறுதியாகிறது.