பாகிஸ்தான் நாட்டில் தற்போது வரை இல்லாத அளவிற்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை தீவிரமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் நேற்று ஒரே நாளில் சுமார் 8 ஆயிரத்து 183 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நாட்டில் தற்போது வரை இல்லாத அளவிற்கு தினசரி பாதிப்பு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் 30 பேர் கொரோனா பாதித்து பலியாகியுள்ளனர்.
இதனால், நாட்டில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29 ஆயிரத்து 192 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், அங்கு தற்போது வரை சுமார் 14,2,070 நபர்கள் கொரோனாவால் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.