பாகிஸ்தானில் தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகமாக கொரோனா தொற்று பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிகமான கொரோனா பாதிப்பு பதிவாகியிருக்கிறது. மேலும், இந்த 45 நாட்களில் மருத்துவமனையில் சேர்க்கப்படும் கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. இது பற்றி அந்நாட்டின் அதிகாரிகள் கூறியிருப்பதாவது, நேற்று ஒரே நாளில் 7,978 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
மேலும், நேற்று ஒரே நாளில் 29 நபர்கள், கொரோனா பாதித்து பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரத்துறை அமைச்சகமானது, கொரோனா பாதிப்பு ஏற்படும் நபர்களின் விகிதம் 10 சதவீதமாக இருப்பதாக கூறியிருக்கிறது. மேலும், பாகிஸ்தானில் கொரோனாவின் 5ஆம் அலை பரவிக்கொண்டிருக்கிறது. எனவே அங்கு கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும் கடுமையாக அதிகரித்து வருகிறது.