தென்கொரிய நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று 8,000-த்தை கடந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரிய நாட்டில் நேற்று ஒரே நாளில் சுமார் 8, 571 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகமான எண்ணிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 3 நாட்களில் தினசரி தொற்று எண்ணிக்கை 7,000-த்தை தாண்டியிருந்த நிலையில், நேற்று 8,000-த்தை கடந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டில் தற்போது வரை, மொத்தமாக சுமார் 66,565 நபர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.