அர்ஜெண்டினாவில் ஒவ்வொரு நாளும் பதிவாகும் கொரோனா தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினாவில் ஒரே நாளில், 95,159 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நாட்டில், தற்போது வரை இல்லாத அளவிற்கு, கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்திருக்கிறது.
ஒரே நாளில் 57 நபர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், நாடு முழுக்க இருக்கும் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் படுக்கைகளில் 37% வரை நோயாளிகளால் நிரம்பி காணப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது.