ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று இல்லை என்று அளிக்கப்படும் சான்றிதழ் இன்னும் ஒரு வருடத்திற்கு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளில் ஒரு நபர் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி எடுத்துக் கொண்டார் அல்லது சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்ற முடிவு வந்திருக்கிறது அல்லது கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு விட்டார் என்பதை காண்பிக்கும் விதமாக கொரோனா சான்றிதழ் அளிக்கப்படும்.
தற்போது வரை அங்கு இச்சான்றிதழ் நடைமுறையில் இருக்கிறது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருக்கும், 27 நாடுகளும் தங்கள் மக்களுக்கு இந்த சான்றிதழ்களை அளிக்கின்றன. இந்நிலையில் தற்போது கோடை கால விடுமுறை தொடங்க இருப்பதால், கொரோனா பாதிப்பு மீண்டும் அதிக அளவில் பரவத் தொடங்கியிருக்கிறது. எனவே, இந்த கொரோனா சான்றிதழுக்கான பயன்பாடு இன்னும் ஒரு வருடத்திற்கு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.