சீன நாட்டின் பெய்ஜிங் மாகாணத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன நாட்டில் சமீப மாதங்களாக கொரோனா பரவல் அதிகரித்தது. மேலும், அங்கு ஜிலின், ஷாங்காய் மற்றும் பெய்ஜிங் போன்ற பல நகர்களில் கொரோனா தீவிரமடைந்தது. எனவே அந்நகரங்களில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், நாட்டில் சமீப நாட்களாக கொரோனா தொற்று குறைய தொடங்கியிருக்கிறது.
எனவே, கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஊரடங்கு விதிமுறைகளும் குறைக்கப்பட்டிருப்பதால், மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். மேலும், பல பகுதிகளில் உணவகங்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது.