சீன நாட்டின் ஷாங்காய் நகரத்தில் மூன்று மாதங்கள் இல்லாத வகையில் ஒரே நாளில் 47 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
உலக நாடுகளில் தற்போது கொரோனா தொற்று குறைந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது எனினும் சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது உலக சுகாதார மையம் வருத்தம் தெரிவித்துள்ளது இந்நிலையில் முதல் தடவையாக கொரோனா பரவியை சீன நாட்டில் மீண்டும் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
அந்நாட்டின் ஷாங்காய் நகரத்தில் மூன்று மாதங்களில் இல்லாத வகையில் கொரோனா தொற்று அதிகரித்து இருக்கிறது. எனவே பள்ளிகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. இன்று ஒரே நாளில் சுமார் 47 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஜூலை மாதத்திற்கு பின் ஒரு நாளில் பதிவாகும் கொரோனா பாதிப்பில் இது அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.