சீன நாட்டின் ஷாங்காய் நகரத்தில் கடுமையான ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில் தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன நாட்டில் இருக்கும் ஷாங்காய் என்னும் நகரில் அதிகமான மக்கள் தொகை இருக்கிறது. இந்நிலையில், அங்கு கொரோனா பரவல் காரணமாக கடுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
தற்போது, கொரோனா படிப்படியாக குறைந்திருப்பதால், அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பொது போக்குவரத்து சேவைகளும் தொடங்கப்படவிருக்கிறது. அங்கு, 30க்கும் அதிகமான பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கு அதிகமான மக்கள் கூடியிருக்கிறார்கள்.