அமெரிக்காவில் இதே நிலை தொடர்ந்தால் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று அமெரிக்க ஆய்வக தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
உலக நாடுகள் இடையே பரவி வரும் கொரோனா தொற்றினால் அமெரிக்காவில் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று விவகாரத்தில் அமெரிக்கா தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் ஆய்வகத்தின் தலைவரான அந்தோணி பாசி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற செனட் சபையின் கேள்வி நேரத்தில் பங்கேற்ற அந்தோணி பாசி கூறுகையில், “கொரோனா தொற்றை தடுக்கும் விவகாரத்தில் அமெரிக்கா தவறான திசையில் பயணித்து வருகின்றது. தற்போது நிலைமை கட்டுப்பாட்டை மீறிவிட்டது தெளிவாக தெரிகின்றது. தற்போது ஒரு நாளில் 40,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலை மாறவில்லை என்றால் எதிர்காலத்தில் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும்” என எச்சரித்துள்ளார்.