சீனாவில் இரண்டாவது அலையாக கொரோனா பரவ தொடங்கியிருப்பதால் பள்ளிகள் மூடப்பட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன
சீனாவின் வூஹான் நகரில் முதன் முதலாக பரவிய கொரோனா தொற்று பல தடுப்பு நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இரண்டாவது அலையாக சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருக்கும் மொத்த விற்பனை சந்தையான சிம்பாடியில் கொரோனா தொற்று பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் 8,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கடந்த 6 தினங்களில் மட்டும் 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி 31 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மீண்டும் தொற்று தீவிரமடைந்துள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசு சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கொரோனா அதிக அளவு பரவாமல் இருக்க பள்ளிகள் அனைத்தையும் மூடியதோடு, 1255 விமானங்களையும் சீன அரசு ரத்து செய்துள்ளது.