ஜூன், ஜூலை மாதத்தில் தான் இந்தியாவில் தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் என எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் தெரிவித்துள்ளார்
இந்தியாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மே 17 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இருந்தும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. மத்திய மாநில அரசும் தொடர்ந்து தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதுவரை இந்தியாவில் 52,952 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு 1783 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஜூன் ஜூலை மாதத்தில் இந்தியாவில் அவற்றின் தாக்கம் உச்சகட்டத்தை அடையலாம் என எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது “இந்தியாவில் இப்போது வெளியாகும் தரவுகளையும், தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் விகிதத்தையும் வைத்து பார்த்தால் ஜூன் ஜூலை மாதத்தில் தொற்றின் அளவு உச்சகட்டத்தை அடையும் வாய்ப்புகள் உள்ளது. ஊரடங்கு நீடிப்பதால் இதில் மாற்றங்கள் ஏற்படலாம். சில காலம் கழித்து தான் இதன் தாக்கம் தெரியவரும் என கூறியுள்ளார்.