வட கொரியா நாட்டில் ஒரு நபருக்கு கூட தடுப்பு செலுத்தப்படாத நிலையில் அங்கு கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவில் தற்போது வரை கொரோனா பாதித்தவர்கள் குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், தற்போது அந்நாட்டிலும் கொரனோ பரவல் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. இது பற்றி வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த 12ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டிருந்தார்.
மேலும் நாடு முழுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தினார். அங்கு தற்போது வரை ஒரு நபருக்கு கூட தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இந்நிலையில் அங்கு கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. 21 நபர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்திருக்கிறது.
எனினும் அரசு ஒருவர் மட்டுமே உயிரிழந்ததாக உறுதிப்படுத்தியிருக்கிறது. அதிபர் கிம் ஜாங் உன், பிற நாடுகள் எவ்வாறு கொரோனாவை தடுத்து வெற்றி கண்டது என்பதை தெரிந்து கொண்டு, சீனாவை உதாரணமாக வைத்து அதிகாரிகள் செயல்படுமாறு உத்தரவிட்டிருக்கிறார்.
தென்கொரிய நாட்டின் புதிய அதிபரான யூன் சுக் யோல், வடகொரிய நாட்டிற்கு தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை அனுப்ப தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் இதுபற்றி வடகொரிய அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்று தென்கொரியா கூறியிருக்கிறது.