Categories
உலக செய்திகள்

பீஜிங்கில் தீவிரமடையும் கொரோனா…. மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அமல்…!!!

சீன நாட்டின் தலைநகரான பீஜிங்கில் கொரோனா அலை ஏற்படக்கூடிய ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் பீஜிங் மாகானத்தில் ஏப்ரல் மாதத்தில் அதிக கொரோனா பரவல் இருந்தது. ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தீவிரமடைந்தது. எனவே அந்நகரில் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்பிறகு அங்கு கொரோனா குறைந்தது. எனவே, கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அந்நகரில் கொரோனா அலை ஏற்படும் ஆபத்து உள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். அதிகமான மக்கள் தொகை காரணமாக, அங்கு இரவு நேர விடுதிகள், கடைகள் போன்றவற்றால் கொரோனோ பரவல் தீவிரமடைந்திருக்கிறது.

இதுமட்டுமல்லாமல் அங்கிருக்கும் ஒரு மதுபான விடுதியானது பிரபலமாக செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து தான் அதிகமான கொரோனா பரவல் ஏற்படுவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |