தென் ஆப்பிரிக்காவில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளை மூன்று வருடங்களாக புரட்டி போட்டு வரும் கொரோனா சமீபத்தில் குறைய தொடங்கியிருந்தது. இந்நிலையில், மீண்டும் சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்னாப்பிரிக்க நாட்டில் இரண்டு நாட்களில் சுமார் 1103 நபர்கள் கொரோனவால் பாதிப்படைந்திருக்கிறார்கள்.
இதனைத்தொடர்ந்து அந்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40,00,894 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், தற்போதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 1,01,935 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.