சீன நாட்டில் கொரோனா தீவிரமாக பரவி வருவதால், மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து, மருந்து பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களாக உலக நாடுகளை புரட்டி போட்ட கொரோனா, சமீப மாதங்களாக சற்று அடங்கியிருந்தது. இந்நிலையில், மீண்டும் சீனாவில் உருமாற்றமடைந்த பி-எப் 7 என்ற வகை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், சீன நாட்டில் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
அங்கு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், மருந்து பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு பிற நாடுகளில் இருக்கும் உறவினர்கள், மருந்துகளை வாங்கி அனுப்பும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து கொரியர் மூலமாக தங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மருந்துகள் வாங்கி அனுப்பப்படுகின்றன.