இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமானது, இந்தியாவின் தினசரி கொரோனாத்தொற்று எண்ணிக்கை குறித்த தகவலை வெளியிட்டிக்கிறது. அதில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1581 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலம், நாட்டில் மொத்தமாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 4, 30, 10,971-ஆக அதிகரித்திருக்கிறது.
மேலும் நேற்று ஒரே நாளில் 2,741 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள். மொத்தமாக கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4, 24,70,755- ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், தற்போது வரை 181, 56, 1,944 தடுப்பூசிகள் மக்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.