ரஷ்யாவில் கடந்த ஒரே நாளில் 33,899 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 10,899,411 ஆக அதிகரித்திருக்கிறது என்று சுகாதார மையம் கூறியிருக்கிறது. மேலும், கடந்த ஒரே நாளில் மாஸ்கோ நகரில் சுமார் 8,795 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் 4,382 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஒரே நாளில் 698 நபர்கள் பலியாகியுள்ளனர். இதனால், ஒட்டு மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 3,23,376-ஆக இருக்கிறது.