Categories
உலக செய்திகள்

“தென் ஆப்பிரிக்காவில் 2 மடங்காக அதிகரித்த கொரோனா!”… விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்…!!

தென்னாப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி அன்று ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. எனவே, உலகின் பல்வேறு நாடுகள் அந்நாட்டிற்கு பயணத்தடையை அறிவித்தது. எனினும், ஹாங்காங், பெல்ஜியம் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கும் அந்த வைரஸ் பரவ தொடங்கிவிட்டது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் வைரஸ் பரவிய பின்பு, அங்கு கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. நேற்று, கொரோனா தொற்று 4,373- லிருந்து 8,561 ஆக அதிகரித்திருக்கிறது.

மேலும், அந்நாட்டில் கடந்த மாதத்தின் தொடக்கத்தில் சராசரியாக நாள் ஒன்றிற்கு 200 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்நாட்டு விஞ்ஞானிகள் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட பின்பு, கொரோனா பாதிப்புகள் வெகுவாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |