சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் இல்லாத அளவிற்கு கொரோனா அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் நேற்று மட்டும் சுமார் 10,500 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அந்நாட்டில் பணியாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, கடந்த ஒரே மாதத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. மேலும், நாட்டிலேயே அதிக மக்கள்தொகை உடைய சூரிச் மாகாணத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் இல்லாமல் போனது.
இதனை அம்மாகாணத்தின் சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது. மேலும், அங்குள்ள மருத்துவமனைகளில், 177 நபர்கள் கொரோனா பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 43 பேர் அவசர சிகிச்சைப்பிரிவில் இருக்கிறார்கள்.