Categories
உலக செய்திகள்

கொரோனா கசிந்தது குறித்த தகவல்… புலனாய்வு அமைப்பு முன்னாள் தலைவர்… வெளியிட்ட பரபரப்பு..!!

பிரித்தானியா புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவர் கொரோனா கசிந்தது குறித்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

சீன நாட்டின் வுஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்ததற்கான ஆதாரங்கள் சீன அதிகாரிகளால் இப்போது அழிக்கப்பட்டிருக்கும் என்று MI6-ன் முன்னாள் பிரித்தானியா தலைவர் கூறியுள்ளார்.
MI6 பிரித்தானியாவின் 1999 முதல் 2000 வரை தலைவராக செயல்பட்ட சர் ரிச்சர்ட் டெரலோவே கூறியிருப்பதாவது, கொரானா வைரஸை வுஹான் ஆய்வகம் இயற்கையாக மனிதனுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றாக மாற்றுவதற்கான சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளதை தற்போது ஆதாரத்துடன் நிரூபிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று என்று எச்சரித்துள்ளார்.

மேலும் மேற்கத்திய நாடுகள் சீனா மீது மிகவும் நம்பிக்கை கொண்டிருந்தனர். கொரானா வைரஸை கொண்டு வுஹான் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை தொடர்பாக வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக முயற்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் சீனாவால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கலாம் என்றும் சர் ரிச்சர்ட் டெரலோவே கூறியுள்ளார்.

Categories

Tech |