Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு மருந்து…. 6-7 நாட்கள் போதும்…. பாபா ராம்தேவ் விளக்கம்….!!

கொரோனா மருந்து குறித்து பாபா ராம் தேவ் அவர்கள் விளக்கமளித்துள்ளார்.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பை தடுக்க மற்றொரு வழியாக பரிசோதனையை தீவிரப்படுத்துவதுடன், அதற்கான தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பதிலும் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்தியாவிலும் இதற்கான ஆராய்ச்சிகள் ஒரு பெரும் தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், பிரபல பதஞ்சலி நிறுவனம் கொரோனில் என்ற கொரோனா மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்து அதற்கான விளம்பரத்திலும் ஈடுபட்டது.

இதையடுத்து இந்திய மருத்துவ கவுன்சிலிடம் முறையான அனுமதியைப் பெறாமல், விளம்பரம் மற்றும் பிரச்சாரம் செய்த குற்றத்திற்காக பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குனர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனா மருந்து குறித்து அந்நிறுவனத்தின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான பாபா ராம்தேவ் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். அதில், கொரோனில் என்ற கொரோனாவுக்கான மருந்தை பதஞ்சலி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தை உட்கொண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 45 பேர் ஆறிலிருந்து ஏழு நாட்களுக்குள் குணம் அடைந்து உள்ளார்கள் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |