Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்துங்கள்!”.. மக்களுக்கு அறிவுரை.. மீண்டும் கொண்டுவரப்பட்ட விதிமுறைகள்..!!

அமெரிக்காவில், விதிமுறைகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டதால், கொரோனா பாதிப்பு அதிகமாக பரவத் தொடங்கியிருக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா, நியூயார்க், டெக்சாஸ் மற்றும் புளோரிடா போன்ற மாகாணங்களில் அதிகமாக கொரோனா பரவி வருகிறது. மேலும் மக்களிடையே முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது ஆகிய விதிமுறைகளை பின்பற்றுவதும் குறையத் தொடங்கியுள்ளது.

மேலும், தடுப்பூசி செலுத்தும் பணியிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் கொரோனா அதிகமாக பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிபர் ஜோ பைடனின், மருத்துவ ஆலோசகர் ஆன்டனி பாவுசி, கொரோனா விஷயத்தில் நாடு சரியான பாதையில் செல்லவில்லை என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். நாட்டு மக்களில் 49% நபர்கள் மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசிகளையும் எடுத்துக் கொண்டுள்ளார்கள். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தான் கொரோனா அதிகமாக பரவுவதாக ஆண்டனி கூறியுள்ளார்.

அமெரிக்காவில், முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. தற்போது கொரோனா அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களும் முகக்கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |