Categories
உலக செய்திகள்

சீனாவின் வூஹான் நகரில் கட்டுப்பாடுகள் தீவிரம்.. உலக சுகாதார மையத்தின் கோரிக்கை..!!

சீனாவில் டெல்டா வைரஸ் பரவி வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன நாட்டில், டெல்டா வகை மாறுபாடு அதிகமாக பரவி வருகிறது. நாட்டில் உள்ள 15 மாகாணங்களில் 500 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. நாஜிங்கில் விமான நிலையத்தின் துப்புரவு பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

மேலும், வூஹான் நகரில் வேலை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 7 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்நகரம் முழுவதும் முன்னெச்சரிக்கையாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், உலக சுகாதார மையம் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளிடம், மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்த கோரியுள்ளது. அதாவது பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே தான் உலக சுகாதார அமைப்பு இவ்வாறு அறிவித்திருக்கிறது.

Categories

Tech |