பாகிஸ்தானில் கொரோனா பரவல் அதிகரித்ததால் மீண்டும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று விகிதம் மூன்று சதவீதமாக இருக்கிறது. மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்திருக்கிறது. எனவே, பிரதமர் ஷபாஸ் ஷெரிப் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் கொரோனாவிற்கு எதிராகன கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைப்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள், கடந்த மார்ச் மாதத்தில் தான் விலக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.