இங்கிலாந்து நாட்டில் இன்றிலிருந்து கொரோனா தொடர்பான விதிமுறைகள் அனைத்தும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் சமீப தினங்களாக கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் இன்றிலிருந்து ஊரடங்கு விதிமுறைகள் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவை மருத்துவ நிபுணர்கள் எதிர்த்தனர். எனினும் அரசாங்கம் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்பு கொரோனா தொற்று குறைந்திருப்பதாக நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
மேலும் இரவு நேரத்தில் இயங்கக்கூடிய கிளப்புகள், உள்ளரங்கு கட்டடங்கள் போன்றவை எந்த வித தடைகளும் இன்றி இயங்கும். முகக்கவசம் அணிவதும், வீட்டிலிருந்து பணி மேற்கொள்வது போன்ற விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருக்கிறது. எனினும் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டு மக்கள் விவேகமாக செயல்பட வேண்டும். மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் தாமதம் ஏற்படுத்தக்கூடாது என்று கூறியிருக்கிறார்.