கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதற்கான காரணத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்
சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் அதிவேகமாக பரவி நேற்றைய நிலவரப்படி 37.7 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. பலியானவர்கள் 783 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 3561 பேருக்குகொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலர் வைரஸிலிருக்கும் பிறள்வுகளை வைத்து தொற்று விரைவாக பரவுவதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. ஆனால் அது மோசம் அடைந்ததாக அர்த்தமல்ல என்று லண்டன் மரபியல் ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்.
கொரோனா வேகமாகப் பரவுவதற்கான காரணம் தெரிந்து கார்னல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கூறியிருப்பதாவது “தொற்று பரப்பும் வைரஸ் மனித செல்லில் தங்களை இணைத்துக்கொண்டு நுழைவதற்கு காரணமாக இருக்கும் பகுதியை ஆராய்ந்தனர். ஒரு விதமான புரதம் மூலம் மனித செல்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி அந்த செல்களுடன் இணைந்து தொற்று பரவுகின்றது. அத்தகைய புரதத்தை உருவாக்க வைரஸ் 4 அமினோ அமிலங்களை பயன்படுத்துகின்றது. மற்ற வைரஸ்கள் பயன்படுத்தும் அமிலங்களை விட கொரோனா வைரஸ் பயன்படுத்தும் அமினோ அமிலங்கள் முற்றிலும் மாறுபட்டதாகவே இருக்கின்றது.
இந்த விவரத்தை பகுப்பாய்வு செய்தல் 2002-2003 ஆம் ஆண்டில் பரவிய சார்ஸ் வைரஸ் மற்றும் ஹெச்கோவ்-ஹெச்கேயூ1 வைரஸின் தன்மையை கொரோனா கொண்டுள்ளது. சார்ஸ் மிகவும் தீவிரமாக பரவும் தன்மை இல்லாவிட்டாலும் உடலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. ஹெச்கோவ்-ஹெச்கேயூ1 மனித உடலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு அதிவேகமாகப் பரவியது. இந்த இரண்டு வைரஸ்களின் தன்மையும் கொண்டதால் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதே ஆய்வின் முடிவில் தெரிய வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.