இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் தடுப்பூசி திட்டத்தில் தாமதமான நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உருமாற்றமடைந்த தொற்றின் வகைகள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு தேவையான எண்ணிக்கையுடைய மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. இந்தியா பிரேசில் போன்ற நாடுகள் கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்த போதிலும் அந்த நாட்டு அரசின் தாமத நடவடிக்கையால் தேவையான எண்ணிக்கையில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை.
மேலும் இந்த நாடுகளில் மொத்த மக்கள் தொகைக்கு தேவையான தடுப்பூசி செலுத்த எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்ஸ் கோர்ஸ்கி தெரிவித்துள்ளதாவது, அமெரிக்க மக்களுக்கு இன்னும் பல வருடங்களுக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர்கள் அவசியப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இதே போன்ற கருத்தை தான் பொது சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் மாடர்னா மற்றும் பைசர் போன்ற தடுப்பூசிகள், பூஸ்டர் தடுப்பூசிக்குரிய சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.