ஐ.நா பொது சபையின் தலைவரான அப்துல்லா சாகித் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதாக கூறியுள்ளார்.
உலக நாடுகளில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷில்டு தடுப்பூசியை பிரிட்டன் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி வந்தது. இந்த நிலையில் ஐநாவின் பொது சபை 76 வது கூட்டமானது சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் ஐநா பொதுச் சபையின் தலைவரான அப்துல்லா சாகித் செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் “கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி குறித்து பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளன.
மேலும் இந்தியாவில் பெறப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியில் இரு தவணைகளையும் நான் செலுத்தி கொண்டேன். ஆனால் அந்த தடுப்பூசி பல்வேறு நாடுகள் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கூறி வருகின்றனர். ஆனால் உலக அளவில் பெரும்பாலான நாடுகள் கோவிஷீல்ட் தடுப்பூசியை தங்களது மக்களுக்கு செலுத்தி வருகின்றனர். இதனையடுத்து கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் திட்டம் குறித்து அடுத்த ஆண்டு ஜனவரியில் ஐ.நா பொதுச் சபை சார்பாக சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு அதில் ஆலோசிக்கப்படும்.
மேலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் சர்வதேச அளவில் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை போடுவதற்கான செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்படும்” என்று கூறியுள்ளார். இதனை அடுத்து “தடுப்பூசி நட்புறவு என்ற திட்டத்தின்’ கீழ் 6.6 கோடி தடுப்பூசிகளை இந்தியா சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதிலும் மாலத்தீவுக்கு 3.12 லட்சம் தடுப்பூசிகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. மேலும் ஐ.நா பொதுச் அவையின் தலைவரான அப்துல்லா சாகித் மாலத்தீவு சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.