சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை அதிகாரிகள் தொடங்கி வைத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணறு பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து மல்லாங்கிணறு பேரூராட்சி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அயன்ரெட்டிய பட்டி பகுதியிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்த கொரோனா தடுப்பூசி முகாமில் பேரூராட்சி செயல் அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர், சுகாதாரத் துறையினர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். அதன் பிறகு இந்த முகாமில் இளைஞர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசியை ஆர்வத்துடன் போட்டுக் கொண்டனர்.