ஆஸ்திரேலியா கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய மக்கள் தங்கள் நாட்டிற்கு வர அனுமதி வழங்கியிருக்கிறது.
இந்தியாவில், கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் எடுத்துக் கொண்டவர்கள் ஆஸ்திரேலியா பயணிக்கலாம் என்றும் அவர்களுக்கு தனிமைப்படுத்துதல் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில், ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமரான ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளதாவது, இந்திய தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்படுகிறது.
இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால், தங்கள் நாட்டிற்கு கல்வி கற்க வரும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சில தடைகள் நீக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே, அஸ்ட்ராஜனகா, பைசர், ஜான்சன் மற்றும் மாடர்னா போன்ற நிறுவனங்களின் தடுப்பூசிகள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.