Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த சினை மாடு…. மின்கம்பியால் நடந்த விபரீதம்…. அரியலூரில் சோகம்…!!

மின்சாரம் பாய்ந்து சினை மாடு உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சூரியமணல் கிராமத்தில் காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இரண்டு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருச்சி-சிதம்பரம் சாலையில் காயத்ரிக்கு சொந்தமான சினை மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது மின் கம்பத்திற்கு அருகில் இருந்த செடி, கொடிகளை பசு மாடு மேய்ந்து கொண்டிருந்த போது சற்று தாழ்வாக சென்ற மின் வயரில் பசு மாட்டின் உடல் உரசியது.

இதனால் மின்சாரம் பாய்ந்து மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் படி மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். அதன்பிறகு சினை மாட்டின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

Categories

Tech |