தட்டைப்பயறு கிரேவி
தேவையான பொருட்கள்:
தட்டைப்பயறு – 1/2 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 2 பற்கள்
மஞ்சள் தூள் – 1/2 சிட்டிகை
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் தட்டைப்பயறை ஊற வைத்து , குக்கரில் போட்டு, 3 விசில் விட்டு வேகவைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் , வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது , தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தக்காளி வெந்ததும், அதில் கரம் மசாலா, வேக வைத்த தட்டைப்பயறு, தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், தட்டைப்பயறு கிரேவி ரெடி!!!