மர்ம நபர்கள் பசுமாட்டை திருடி சென்ற சம்பவம் விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விஜய கோபலபுரம் பகுதியில் பாலன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் பாலனுக்கு சொந்தமான பசுமாட்டை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து பாடாலூர் காவல் நிலையத்தில் பாலன் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பசு மாட்டை திருடி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இப்பகுதியில் தொடர்ந்து மாடுகள் திருடு போவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.