Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டில நின்ன மாட காணூம்…. எதுக்கு இந்த வேண்டாத வேலை… 2 வாலிபர்கள் கைது…!!

சேலம் மாவட்டத்தில் வீட்டில் இருந்த மாடுகளை திருடி விற்ற வாலிபர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள கன்னங்குறிச்சி மூக்கனேரி பகுதியில்  தேவி பிரித்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் மாடுகளை வளர்த்து பால் கறந்து அதை விற்று அதன் மூலம் வருமானம்  ஈட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பசுமாடு ஒன்று காணாமல் போனதால்  அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில்  அலைந்து தேடி பார்த்தார், ஆனால்  மாடு எங்கேயும் கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து பிரித்தா, காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  இதுகுறித்து காவல் துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர், அப்பொழுது பாபு மற்றும் சதீஷ்குமார் என்ற இருவரும் மாட்டை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் அவர்களை  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |