Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேடு சந்தையில் மீண்டும் பரவியது கொரோனா…!!

கோயம்பேடு காய்கறிச் சந்தையில் வியாபாரிகள் தொழிலாளர்கள் என 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை கோயம்பேடு சந்தை கடந்த மே மாத தொடக்கத்தில் மூடப்பட்டு திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தற்காலிக சந்தை மூலம் காய்கறி வியாபாரம் நடைபெற்றுவந்தன. வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து கடந்த மாதம் 18 ஆம் தேதி கோயம்பேடு உணவு தானிய அங்காடி, இருபத்தி எட்டாம் தேதி காய்கறி சந்தையும் திறக்கப்பட்டது.

எனினும் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 200 பெரிய மொத்த வியாபாரக் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டன. மேலும் கோயம்பேடு சந்தையில் உள்ள வியாபாரிகள் மற்றும் வந்து செல்வோர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. கடந்த மாதம் 18 ஆம் தேதி முதல் அக்டோபர் 10ம் தேதி வரையிலான 22 நாட்களில் 2,800-க்கும் மேற்பட்டோருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 50 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் விவரங்கள் கண்டறியப்பட்ட அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று இருக்கிறதா என்று அந்தந்த மண்டல சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்து கண்காணித்து வருகின்றனர்.

Categories

Tech |