Categories
அரசியல் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சீமானுக்கு கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆதரவு!!… தொடரும் அரசியல் சர்ச்சைகள்

நாகப்பட்டினம் மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனை அடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் இந்தியா முழுவதும் பிரச்சாரம் பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

திருவாரூர் சட்டமன்ற தொகுதியின்  இடைத் தேர்தல் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் மற்றும் மக்களவை தேர்தலில் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ள  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் ஆகியோரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத்  திருவாரூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் இந்த முக்கியமான கூட்டத்தில் வேட்பாளர் செல்வராஜ் பங்கேற்க்காமல் ,அதே திருவாரூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்

மேலும்  மேடைக்கு சென்று சீமானை சந்தித்து அவரது பேச்சு குறித்து பாராட்டினார். இது தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது இது குறித்து அவர் தற்பொழுது விளக்கம் அளித்துள்ளார் அவர் கூறியதாவது,  பிரச்சார பயணத்திற்கு செல்லும் வழியில் சீமான் மோடியை பற்றி விமர்சித்து பேசியதன் காரணமாக நேரில் கேட்க சென்றதாக கூறினார்.

மேலும் இந்தச் சந்திப்பில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றும் செல்வராஜ் விளக்கம் அளித்துள்ளார். மேலும் வாக்கு சேகரிக்க சென்றதால் தான்  பிரகாஷ்காரத்தின் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்று செல்வராஜ் தெரிவித்தார்

 

Categories

Tech |