முறைகேட்டில் ஈடுபட்ட சிபிஐ போலீஸ் சூப்பிரண்டு உட்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சிபிஐ அதிகாரிகள், வங்கியில் ரூபாய் 4,300 கோடி கடன் மோசடியில் ஈடுபட்டதாக சில நிறுவனங்கள் மீது வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் உதவி செய்வதற்காக இன்ஸ்பெக்டர் கபில் தன்காட், சிபிஐ துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.கே. ரிஷி மற்றும் ஒரு வக்கீல் என மூன்று பேர் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து சிபிஐ துணை போலீஸ் சூப்பிரண்டு உட்பட அந்த மூன்று பேரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துவிட்டனர். இதனை தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலத்தின் சஹாரன்பூரில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.கே. ரிஷியின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.