ஊரடங்கு விதிகளை கண்டிப்புடன் கடைபிடிக்குமாறும், நீர்த்துப்போக செய்ய வேண்டாம் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
கேரளாவில் பாதிப்பு குறைந்த மண்டலங்களில் பணிமனைகள், முடி திருத்தும் கடைகள், புத்தகக் கடைகள், நகர எல்லைக்குள் செயல்படும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அனைத்தும் கட்டுப்படுகளுடன் திறக்கப்பட்டுள்ளன.
அதே போல் உணவகங்களில் பொதுமக்கள் அமர்ந்து உணவருந்தவும், தனியார் வாகனங்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் இயங்கவும் அனுமதி அளித்துள்ளது. இது ஊரடங்கு நீர்த்துப் போகச் செய்யும் செயல் என்று கண்டித்துள்ள மத்திய அரசு இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கேரள அரசை கேட்டுக் கொண்டுள்ளது. ஊரடங்கு விதிகளை கண்டிப்புடன் கடைபிடிக்குமாறும், அதை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் விதிகளை தளர்த்த வேண்டாம் என்றும் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.